பிரிட்டன் பொதுத்தேர்தலில் வெற்றி பெற்றால், தற்போதைய அரசின் Brexit திட்டத்தை ரத்து செய்துவிட்டு புதிய Brexit கொள்கையை வகுப்போம் : தொழிலாளர் கட்சி திடீர் அறிவிப்பு

Apr 26 2017 1:49PM
எழுத்தின் அளவு: அ + அ -

பிரிட்டன் பொது தேர்தலில் வெற்றி பெற்றால், தற்போதைய அரசு கொண்டுவந்துள்ள Brexit திட்டத்தை ரத்து செய்துவிட்டு புதிய Brexit கொள்கை வகுப்போம் என தொழிலாளர் கட்சி அறிவித்துள்ளது.

பிரிட்டன் நாடாளுமன்றத்தின் பதவிக்காலம் வரும் 2020-ம் ஆண்டு முடிவடையவுள்ள நிலையில், பதவிக்காலம் முடியும் முன்னரே பொதுத் தேர்தலை நடத்த முடிவு செய்த பிரதமர் தெரசா மே, வரும் ஜுன் மாதம் 8-ம் தேதி பொதுத்தேர்தல் நடைபெறும் என அறிவித்தார். நாட்டின் ஸ்திரத்தன்மையை கொண்டுவருவதற்கு முன்பே தேர்தல் நடத்துவதுதான் ஒரே வழி என பிரதமர் தெரசா மே தெரிவித்துள்ளார். பொதுத்தேர்தலை ஜுன் 8-ம் தேதி நடத்த கொண்டு வந்த தீர்மானமும் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து விலகும் Brexit தொடர்பான அரசியல் அழுத்தங்கள், ஐரோப்பிய ஒன்றியத்தில் நீடிப்பதற்கு ஸ்காட்லாந்து முடிவெடுத்துள்ள நிலையில் தெரசாமே-யின் தேர்தல் தேதி அறிவிப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. இந்நிலையில், பிரிட்டன் பொதுத் தேர்தலில் வெற்றி பெற்றால், தற்போதைய அரசு கொண்டுவந்துள்ள Brexit திட்டத்தை ரத்து செய்துவிட்டு புதிய Brexit கொள்கை வகுப்போம் என தொழிலாளர் கட்சி அறிவித்துள்ளது. Brexit விவகாரங்களை கையாளும் தொழிலாளர் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான Keir Starmer லண்டனில் இதனை தெரிவித்தார். தொழிலாளர் கட்சி ஏற்கனவே பிரதிபலித்த 6 முக்கிய விஷயங்களை பிரதிபலிக்கும் வகையிலான பேச்சுவார்த்தைக்கு முன்னுரிமை அளித்து, புதிய Brexit கொள்கை உருவாக்கப்படும் என தெரிவித்தார்.

ஐரோப்பிய ஒன்றியத்தில் பிற நாடுகளை சேர்ந்த சுமார் 30 லட்சம் பேர் பிரிட்டனில் வசிப்பதாகவும், பிரிட்டனைச் சேர்ந்த 12 லட்சம் மக்கள் ஐரோப்பிய ஒன்றியத்தின் பிற நாடுகளில் வசிப்பதாகவும் கணக்கிடப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00