சீனாவில் நடைபெற்ற விமான சாகச நிகழ்ச்சியில், லிதுவேனியா நாட்டு முன்னாள் அதிபர் நிகழ்த்திய சாகசங்கள் பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தின
Apr 29 2017 6:00PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சீனாவின் Henan மாகாணத்தில் உள்ள Zhengzhou நகரில் நேற்று விமான சாகச நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், உலகின் பல்வேறு சாகச வீரர்கள் கலந்துகொண்டனர். இவர்களுடன் லிதுவேனியா அணியின் சார்பில், அந்நாட்டின் முன்னாள் அதிபர் Rolandas Paksas-சும் பங்கேற்று சாகசங்களை அரங்கேற்றினார். விமானத்தில் பறந்தபடி கர்ணம் அடித்து Paksas செய்த சாகசங்கள் பார்வையாளர்களை மெய்சிலிர்க்க வைத்தன. Zhengzhou விமான சாகச நிகழ்ச்சியில் 2-வது முறையாக பங்கேற்ற Paksas, சோவியத் மற்றும் லித்துவேனியன் தேசிய மற்றும் சர்வதேச விமானப் போட்டிகளில் வெற்றிவாகை சூடியுள்ளார். அரசியல் தலைவராக மட்டுமின்றி விமான சாகச வீரராகவும் அசத்தி வரும் Paksas, அனைவருக்கும் ஒரு ஊக்கசக்தியாக திகழ்வதாக அனைவரும் பாராட்டு தெரிவித்தனர்.