போதைப்பொருளுக்கு எதிரான போரை தவறாகப் பயன்படுத்தும் காவல்துறையினர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் : ஃபிலிப்பைன்ஸ் அதிபர் எச்சரிக்கை

Aug 22 2017 6:54PM
எழுத்தின் அளவு: அ + அ -

போதைப்பொருளுக்கு எதிரான போரை தவறாகப் பயன்படுத்தும் காவல்துறையினர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஃபிலிப்பைன்ஸ் அதிபர் Rodrigo Duterte தெரிவித்துள்ளார்.

ஃபிலிப்பைன்ஸ் அதிபர் Rodrigo Duterte, போதைப்பொருள் கடத்தலுக்கு எதிராக அந்நாட்டில் கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுவோருக்கு ஃபிலிப்பைன்சில் மரண தண்டனை விதிக்கப்படுகிறது. இந்நிலையில், போதைப்பொருள் கடத்தியதாக கடந்த சில தினங்களுக்கு முன்பு, தலைநகர் மணிலாவில், பள்ளி மாணவன் ஒருவனை போலீசார் சுட்டுக்கொன்றனர். ஆனால், அச்சிறுவன் தவறுதலாக தண்டிக்கப்பட்டுவிட்டதாக பொதுமக்கள் குற்றம் சாட்டினர். மேலும், சிறுவனின் மரணத்திற்கு நீதி கேட்டு அங்கு போராட்டம் நடைபெற்றது.

இந்நிலையில், இது தொடர்பாக பேட்டியளித்த ஃபிலிப்பைன்ஸ் அதிபர் Rodrigo Duterte, போதைப்பொருள் கடத்தியதாக பள்ளி மாணவன் ஒருவன் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரத்தில், போலீசார் தவறு செய்திருக்க வாய்ப்பிருப்பதை தான் ஒத்துக்கொள்வதாக தெரிவித்தார். இது தொடர்பான முறையான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். மேலும், போதைப் பொருளுக்கு எதிரான போரில் தவறு செய்த போலீசார் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டால், நிச்சயம் தண்டனை வழங்கப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00