தனிநாடு கோரி பொதுவாக்கெடுப்பு நடத்தியுள்ள Catalonia-வில் மறுதேர்தல் - ஸ்பெயின் நாட்டின் அவசர அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு

Oct 22 2017 12:45PM
எழுத்தின் அளவு: அ + அ -

தனிநாடு கோரி பொதுவாக்கெடுப்பு நடத்தியுள்ள Catalonia மாகாண அரசை சஸ்பெண்ட் செய்து விட்டு, அங்கு மறுதேர்தல் நடத்த ஸ்பெயின் முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஸ்பெயின் நாட்டின் பொருளாதாரத்தில் முக்கியப் பங்கு வகிக்கும் மாகாணமான Catalonia, தனி நாடாகப் பிரிவது தொடர்பான வாக்கெடுப்பை, கடந்த 1-ம் தேதி நடத்தியது. இந்த வாக்கெடுப்பில் பங்கேற்ற 90 சதவீதம் பேர், கேட்டலோனியா தனிநாடாகப் பிரிவதற்கு ஆதரவு தெரிவித்தனர்.

இதனையடுத்து, Catalonia நாடாளுமன்றத்தில் பேசிய அதன் தலைவர் Carles Puigdemont, தனிநாடு வாக்கெடுப்பு முடிவுகளை ஏற்றுக்கொள்வதாக அறிவித்தார். இருப்பினும் தனிநாடு குறித்த அறிவிப்பை அவர் வெளியிடவில்லை. ஸ்பெயின் அரசுடன் பேசி முடிவெடுக்கப்படும் என அவர் கூறியிருந்தார்.

இது Catalonia மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. இதன் பின்னர், தனிநாடாகப் பிரிவது குறித்து பரிசீலனை செய்து, ஐந்து நாட்களுக்குள் முடிவை அறிவிக்குமாறு ஸ்பெயின் பிரதமர் Mariano Rajoy கூறியிருந்தார். பிரிந்து செல்வதென்றால் அந்த முடிவை பரிசீலிக்க மேலும் மூன்று நாட்கள் அவகாசம் வழங்கப்படும். அதன் பின்னரும் அவர்கள் உறுதியான முடிவை எடுக்கவில்லை என்றால், 19-ம் தேதி Catalonia அரசு கலைக்கப்படும் என Mariano Rajoy எச்சரிக்கை விடுத்திருந்தார்.

ஸ்பெயின் அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 155-ன் படி, ஸ்பெயின் அரசுக்கு Catalonia நாடாளுமன்றத்தைக் கலைக்கவும், ஸ்பெயினின் நேரடி ஆளுமையின் கீழ் கேட்டலோனியாவை கொண்டு வரவும் முடியும் என தெரிவிக்கப்பட்டது.

இதனிடையே, Carles Puigdemont உறுதியான முடிவுகள் எதுவும் எடுக்காத சூழ்நிலையில், ஸ்பெயின் அரசின் அவசர அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. Catalonia அரசை சஸ்பெண்ட் செய்து விட்டு, அங்கு மறுதேர்தல் நடத்த இக்கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00