மும்பை தொடர் தாக்குதலில் பாகிஸ்தானுக்கு தொடர்பு- நவாஸ் ஷெரீப் ஒப்புதல் : பாகிஸ்தானின் உண்மை முகம் அம்பலம்

May 13 2018 4:49PM
எழுத்தின் அளவு: அ + அ -

மும்பையில் 2008-ம் ஆண்டு நிகழ்ந்த தொடர் தாக்குதல் சம்பவங்களில் ஈடுபட்ட Lashkar-e-Taiba தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தான் ராணுவம் உதவியதாக அந்நாட்டு முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் ஒப்புக்கொண்டுள்ளார். இதன் மூலம் பாகிஸ்தானின் உண்மை முகம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

மும்பையில் கடந்த 2008-ம் ஆண்டு Lashkar-e-Taiba தீவிரவாதிகள் நடத்திய தொடர் தாக்குதல் சம்பவங்களில் 180-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். 300-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இச்சம்பவம் உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தான் அரசு உதவியதாக இந்தியா தொடர்ந்து தெரிவித்து வருகிறது. இதனை நீருபிக்கும் விதமாக பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் அளித்துள்ள பேட்டி அமைந்துள்ளது.

பாகிஸ்தானின் பிரபல செய்தி நிறுவனமான Dawn-க்கு, நவாஸ் ஷெரீப் அளித்த பேட்டியில், பாகிஸ்தானில் செயல்பட்டு வரும் தீவிரவாத அமைப்புகளே மும்பை தாக்குதல் சம்பவத்திற்கு பொறுப்பு என தெரிவித்தார். மேலும் தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகளுக்கு, பாகிஸ்தான் ராணுவம் உதவியதாகவும் அவர் ஒப்புக்கொண்டுள்ளார். எந்த காரணத்திற்காக பாகிஸ்தான் அரசால், விசாரணையை முடிக்க முடியவில்லை என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். எல்லை கடந்து சென்று மும்பையில் தாக்குதல் நடத்தி 150-க்கும் மேற்பட்டோரை கொல்ல பாகிஸ்தான் ராணுவத்தை நாம் அனுமதிக்கலாமா? என்றும் நவாஸ் ஷெரிப் அடுக்கடுக்காக கேள்வி எழுப்பியுள்ளார்.

இதனிடையே நவாஸ் ஷெரீப் தெரிவித்துள்ள இந்த உண்மை தகவல், இந்தியாவுக்கு மிகவும் முக்கியமானது என மத்திய அரசின் வழக்கிறஞர் Ujjwal Nikam தெரிவித்துள்ளார். பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ-க்கும் , ராணுவத்திற்கும் கைப்பாவையாக அந்நாட்டு அரசு செயல்பட்டு வருவது இதன் மூலம் நிரூபணமாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மும்பை தாக்குதல் சம்பவம் தொடர்பான வழக்கு, பாகிஸ்தானின் ராவல்பிண்டி நகரில் உள்ள தீவிரவாத எதிர்ப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00