அணு ஆயுத சோதனைக் களத்தை வரும் 23-ம் தேதியிலிருந்து 3 நாட்களுக்குள் அழிக்‍க வடகொரியா நடவடிக்கை - அமெரிக்க அதிபர் டிரம்ப் பாராட்டு

May 13 2018 6:36PM
எழுத்தின் அளவு: அ + அ -

ஏற்கெனவே அறிவித்தபடி, அணு ஆயுத சோதனைக் களத்தை, வரும் 23-ம் தேதியிலிருந்து மூன்று நாட்களுக்குள் அழித்துவிட வடகொரியா நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்கு, அமெரிக்க அதிபர் Donald Trump பாராட்டு தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு வடகொரியா அணுகுண்டு மற்றும் ஏவுகணை சோதனைகளை நடத்தி, கொரிய தீபகற்பத்திற்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியது. இதனால், நேச நாடான தென்கொரியா மற்றும் ஜப்பானுக்கு ஆதரவாக குரல் கொடுத்த அமெரிக்க அதிபர் Donald Trump, வடகொரிய அதிபர் Kim Jong Un உடன், வார்த்தைப் போரில் ஈடுபட்டார். கொரிய தீபகற்பத்தில் எந்த நேரத்திலும் போர் மூளும் ஆபத்து ஏற்பட்ட நிலையில், தென்கொரியாவில் நடைபெற்ற குளிர்கால ஒலிம்பிக் போட்டியில், வடகொரியா கலந்துகொண்டதன் மூலம் பதற்றம் தணிந்து சுமூக சூழ்நிலை உருவானது. கொரிய தீபகற்பத்தில், அணு ஆயுதங்களை துறப்பதற்கு, வடகொரியா முன்வந்தது. இதுதொடர்பாக, கடந்த மாதம் 27-ம் தேதி, தென்கொரிய அதிபர் Moon Jae-In - வடகொரிய அதிபர் Kim Jong Un நடத்திய சந்திப்பின்போது உடன்பாடு ஏற்பட்டது. மேலும், வடகொரியா பிடித்து வைத்திருந்த 3 அமெரிக்கர்கள் விடுவிக்கப்பட்டனர். இதனைத் தொடர்ந்து, ஜுன் மாதம் 12-ம் தேதி சிங்கப்பூரில், வடகொரிய அதிபரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தப்போவதாக அமெரிக்க அதிபர் Trump அறிவித்துள்ளார்.

இந்த சூழ்நிலையில், ஏற்கெனவே ஒப்புக்கொண்டபடி, அணு ஆயுத சோதனைக் களத்தை, வரும் 23-ம் தேதியிலிருந்து மூன்று நாட்களுக்குள் அழித்துவிட வடகொரியா நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்தப் பணியில், அணு ஆயுத கழகம் மற்றும் சம்பந்தப்பட்ட நிறுவன தொழில்நுட்பாளர்கள் ஈடுபடுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அணு ஆயுத சோதனைக்களம் அழிக்கப்படுவதைக் காண, அமெரிக்கா, தென்கொரியா உள்ளிட்ட வெளிநாட்டு பத்திரிகையாளர்கள் அனுமதிக்கப்படுவார்கள் எனவும் வடகொரியா தெரிவித்துள்ளது.

அணு ஆயுத சோதனைக்களத்தை அழிப்பதற்கு, வடகொரியா நடவடிக்கை எடுத்துள்ளதை, அமெரிக்க அதிபர் Trump வரவேற்று பாராட்டு தெரிவித்துள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00