தீவிரவாதத்தை ஒடுக்‍க பாகிஸ்தான் உறுதியான நடவடிக்‍கைகளை மேற்கொள்ள வேண்டும் - அமெரிக்‍கா மீண்டும் எச்சரிக்‍கை

Oct 24 2018 4:49PM
எழுத்தின் அளவு: அ + அ -

தீவிரவாதத்தை ஒடுக்‍க பாகிஸ்தான் உறுதியான நடவடிக்‍கைகளை மேற்கொள்ள வேண்டும் என அமெரிக்‍கா மீண்டும் எச்சரிக்‍கை விடுத்துள்ளது.

அமெரிக்‍க வெளியுறவு அமைச்சர் Mike Pompeo, வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் பேசியபோது, அஃப்கானிஸ்தான் எல்லைப் பகுதியில் தீவிரவாதிகளை ஒடுக்‍குவதற்கு பாகிஸ்தான் நடவடிக்‍கைகளை எடுக்‍க வேண்டுமென வலியுறுத்தினார். அவ்வாறு செய்யாவிட்டால், அதற்கான விளைவுகளுக்‍கு அந்நாடே பொறுப்பேற்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார். இதுகுறித்து ஏற்கனவே கடந்த மாதம் பாகிஸ்தான் புதிய பிரதமர் இம்ரான் கானை சந்தித்தபோது தான் வலியுறுத்தியதாகவும் அப்போது அவர் தெரிவித்தார். தென்மத்திய ஆசியா குறித்த அமெரிக்‍காவின் கொள்கையில் எந்த மாற்றமும் இல்லை என்றும், பயங்கரவாதிகளுக்‍கு பாகிஸ்தான் புகலிடம் அளிக்‍காது என தான் எதிர்பார்ப்பதாகவும் கூறினார். பாகிஸ்தான் மண்ணில் இருந்து செயல்படும் தீவிரவாத குழுக்‍களை முற்றிலுமாக ஒடுக்‍க வேண்டும் என்று பிரதமர் இம்ரான்கானிடம் வலியுறுத்தி கேட்டுக்‍கொண்டதாகவும் Mike Pompeo தெரிவித்தார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00