கொழும்பு விமான நிலையம் அருகே சக்தி வாய்ந்த பைப் வெடிகுண்டு கண்டுபிடிக்‍கப்பட்டதால் மேலும் பரபரப்பு - வெடிகுண்டுகளை கொண்டுசென்ற வாகனத்தின் ஓட்டுநர் அதிரடி கைது

Apr 22 2019 1:17PM
எழுத்தின் அளவு: அ + அ -
இலங்கைத் தலைநகர் கொழும்பு சர்வதேச விமான நிலையம் அருகே மறைத்து வைக்‍கப்பட்டிருந்த சக்தி வாய்ந்த பைப் வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டதால், மீண்டும் அங்கு பதற்றம் ஏற்பட்டது.

இலங்கையில் இன்று காலை, கொழும்பு பண்டார நாயக சர்வதேச விமான நிலையம் அருகே பதுக்கி வைக்கப்பட்டிருந்த சக்தி வாய்ந்த பைப் வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள், அங்கிருந்த பைப் வெடிகுண்டை பத்திரமாக செயலிழக்‍க செய்தனர். இதனால் பெரும் உயிர் சேதம் தவிர்க்‍கப்பட்டது. வேறு எங்கேனும் வெடிகுண்டுகள் வைக்‍கப்படுள்ளனவா என இலங்கை முழுவதும் உஷார் படுத்தப்பட்டு தீவிர சோதனை நடந்து வருகிறது.

இதனிடையே, நேற்றைய தாக்‍குதலுக்‍கு பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டுகளை, கொண்டுச்சென்ற வேன் ஓட்டுனர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், இலங்கைக்‍கு சுற்றுலா சென்ற கர்நாடகாவைச் சேர்ந்த 7 பேர் மாயமாகியுள்ளனர். அவர்களில் 2 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 5 பேர் குறித்த தகவல் ஏதும் வெளியாகவில்லை. இவர்கள் அனைவரும் மதசார்பற்ற ஜனதாதளம் கட்சியை சேர்ந்தவர்கள் எனக்‍ கூறப்படுகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
 • MEDHUVA PESUNGA

  Mon - Fri : 06:57

 • KELVIGAL AAYIRAM

  Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

 • MAKKALODU MAKKAL SELVAR

  Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

 • ACHUM ASALUM

  Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3612.00 Rs. 3863.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.40 Rs. 48000.00
மும்பை Rs. 48.40 Rs. 48000.00
டெல்லி Rs. 48.40 Rs. 48000.00
கொல்கத்தா Rs. 48.40 Rs. 48000.00