ரஷ்யா சென்ற வடகொரிய அதிபர் கிம் ஜாங் வுன்னிற்கு உற்சாக வரவேற்பு - புதினுடன் இருதரப்பு பேச்சுவார்த்தையில் கிம்ஜாங் பங்கேற்பு

Apr 25 2019 6:21PM
எழுத்தின் அளவு: அ + அ -

அரசுமுறை பயணமாக ரஷ்யா சென்றுள்ள வடகொரிய அதிபருக்‍கு இன்று பாரம்பரிய முறைப்படி உற்சாக வரவேற்பு அளிக்‍கப்பட்டது.

வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆகியோர் கடந்த 2018-ம் ஆண்டு சிங்கப்பூரில் முதல்முறையாக சந்தித்து பேசினர். அப்போது கொரிய தீபகற்ப பகுதியை அணுஆயுதமற்ற பிரதேசமாக மாற்ற உடன்பாடும் செய்து கொண்டனர். பின்னர் மீண்டும் கடந்த பிப்ரவரியில் வியட்நாம் தலைநகர் ஹனோயில் இவ்விருவரும் சந்தித்துப் பேசினர்.

இந்நிலையில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை சந்தித்துப் பேச வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் திட்டமிட்டார். இதனை புதின் ஏற்கெனவே வரவேற்ற நிலையில், ரயில் மூலம் ரஷ்யா புறப்பட்ட கிம் ஜாங் உன், அந்நாட்டின் விளாடிவோஸ்டாக்‍ நகரை சென்றடைந்தார். இதைத்தொடர்ந்து இன்று பேச்சுவார்த்தை நடைபெறும் பகுதிக்‍கு வருகை தந்த அவரை, புதின் மற்றும் அமைச்சர்கள், அதிகாரிகள் வரவேற்றனர்.

இவ்விரு தலைவர்களுக்‍கு இடையே முதன்முறையாக நடைபெறும் இந்த சந்திப்பு சர்வதேச அரசியல் அரங்கில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்றைய பேச்சுவார்த்தையில் பரஸ்பர உறவு மற்றும் பல்வேறு பிரச்னைகள் குறித்து ஆலோசிக்‍கப்படுகிறது. இந்த சந்திப்பு இருதரப்பு உறவை மேம்படுத்தும் என குறிப்பிட்ட புதின், கொரிய தீபகற்பத்தில் பதற்றத்தை தணிக்‍க உதவும் என்றும் தெரிவித்தார்.

இந்த சந்திப்பின்போது மிக முக்‍கியமான அணு ஆயுதம் குறித்தும், புதினுடன், வடகொரிய அதிபர் பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறப்படுகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00