சர்வதேச விண்வெளி மையத்திற்கு மனித உருவ ரோபோவை அனுப்பிய ரஷ்யா - மின் இணைப்புகளை சரிசெய்தல் உள்ளிட்ட பணிக‌ளை விரைவில் செய்யும்

Aug 23 2019 11:10AM
எழுத்தின் அளவு: அ + அ -

ரஷ்யாவின் விண்வெளி நிறுவனமான, 'ரோஸ்காஸ்மோஸ்' விண்வெளி ஆராய்ச்சிக்காக, முதன்முதலாக, மனித வடிவிலான, 'ரோபோ'வை, சர்வதேச விண்வெளி மையத்திற்கு அனுப்பி உள்ளது.

கஜகஸ்தான் நாட்டின், பாய்கோர் மாகாணத்தில் உள்ள, ரஷ்யாவின் ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து, சோயுஸ் எம் எஸ்-14 என்ற ஆளில்லா விண்கலம் அனுப்பப்பட்டது. இதில், 'ஃபெடோர்' என்ற மனித உருவ ரோபோவும் அனுப்பப்பட்டது.

இந்த ரோபோ, சர்வதேச விண்வெளி மையத்தில் உள்ள விண்வெளி வீரர்களுக்கு, அவசர காலங்களில் உதவி செய்வதற்காக, 10 நாட்கள் பயிற்சி மேற்கொள்ள இருக்கிறது. 1.8 மீட்டர் உயரமும், 160 கிலோ எடையும் கொண்ட இந்த ரோபோ, ஸ்கைபோட் எஃப் 850 என்ற அடையாள எண்ணுடன் அனுப்பப்பட்டு உள்ளது.

இது, மின் இணைப்புகளை சரி செய்தல், தீயணைப்பான்களை பயன்படுத்துதல் போன்ற பணிகளை, விரைவாகச் செய்யும். சர்வதேச விண்வெளி மையத்திற்கு, ஏற்கனவே, அமெரிக்கா மற்றும் ஜப்பான், மனித வடிவிலான ரோபோவை அனுப்பி உள்ளது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00