விண்வெளிக்கு ரோபோவை அனுப்பும் ரஷ்யாவின் முயற்சி தோல்வி : சர்வதேச விண்வெளி மையத்துடன் சோயுஸ் விண்கலம் இணையவில்லை

Aug 25 2019 2:55PM
எழுத்தின் அளவு: அ + அ -

விண்வெளிக்கு ரோபோவை அனுப்பும் ரஷ்யாவின் முயற்சியில் தற்காலிகமாக தோல்வி ஏற்பட்டுள்ளது.

ரஷ்யாவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ராஸ்கஸ்மாஸ் அண்மையில் ஹுயூமனாய்டு ரொபோ ஒன்றை தயாரித்தது. இந்த ரோபோவை பூமியில் இருந்துகொண்டே கட்டுப்படுத்த முடியும். ஸ்கைபாட்-F850 என்று அழைக்கப்படும் இந்த ரோபோட் சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி நிலையத்திற்கு சென்று அங்குள்ள வீரர்களுக்கு உதவும் வகையில் அனுப்ப திட்டமிடப்பட்டிருந்தது. அதற்காக ஸ்கைபாட் ரோபட், ரஷ்யாவின் சோயுஸ் விண்கலம் மூலமாக விண்வெளிக்கு அனுப்பப்பட்டது. ஆனால் விண்வெளிக்கு சென்ற சோயுஸ் விண்கலம் சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையத்துடன் இணைக்கும் விஞ்ஞானிகளின் முயற்சியில் தோல்வி ஏற்பட்டது. கட்டளைக்கு ஏற்ப சோயுஸ் விண்கலம் செயல்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனையடுத்து மீண்டும் வரும் திங்கட்கிழமையன்று முயற்சி மேற்கொள்ளப்படும் என்று ரஷ்ய விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00