அமெரிக்கா மீது தாக்குதல் நடத்துங்கள் - ஆதரவாளர்களுக்கு அல்கொய்தா தலைவர் பகிரங்க உத்தரவு

Sep 13 2019 1:58PM
எழுத்தின் அளவு: அ + அ -

அமெரிக்கா மீது தாக்குதல் நடத்துமாறு தனது ஆதரவாளர்களுக்கு அல்-கொய்தா தலைவர் அழைப்பு விடுத்துள்ள சம்பவம், அமெரிக்‍க மக்‍களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவில் கடந்த 2001-ம் ஆண்டு செப்டம்பர் 11-ந் தேதி, நியூயார்க்கில் உள்ள உலக வர்த்தக மையத்தின் இரட்டை கோபுர கட்டிடத்தின் மீதும், ராணுவ தலைமையகமான பென்டகன் மீதும் அல்கொய்தா பயங்கரவாதிகள் விமானங்களை மோதி தாக்குதல் நடத்தினர். இந்த பயங்கர தாக்குதலில் சுமார் 3 ஆயிரம் பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட அல்கொய்தா இயக்கத்தின் தலைவரான ஒசாமா பின்லேடனை, அமெரிக்கப் படையினர் கடந்த 2011-ம் ஆண்டு மே மாதம் 2-ந் தேதி சுட்டுக்கொன்றனர்.

இந்நிலையில் இரட்டை கோபுர தாக்குதலின் 18-வது ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டதையொட்டி, அல்கொய்தா அமைப்பின் தற்போதைய தலைவரான அல் ஜவாஹிரி வீடியோ ஒன்றை வெளியிட்டார். அந்த வீடியோவில், அமெரிக்கா, இஸ்ரேல், ரஷியா மற்றும் ஐரோப்பிய நாடுகள் மீது தாக்குதல் நடத்துமாறு அல்கொய்தா ஆதரவாளர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். பயங்கரவாத இயக்கங்களின் ஆன்லைன் செயல்பாடுகளை கண்காணித்து வரும் எஸ்.ஐ.டி.இ. எனப்படும் புலனாய்வு குழு அந்த வீடியோவைக் கண்டறிந்து வெளியிட்டுள்ளது. எகிப்தை சேர்ந்த மருத்துவரான அல் ஜவாஹிரி, ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்டதற்கு பிறகு, அல்கொய்தா அமைப்பின் தலைவரானார். இவர் அப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் பதுங்கியிருப்பதாகக் கூறப்படுகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00