துப்பாக்கிகளுக்கான உரிம காலத்தை கு‌றைக்க திட்டம் - நாடாளுமன்றத்தில் புதிய மசோதாவை தாக்கல் செய்த நியூசிலாந்து பிரதமர்

Sep 13 2019 5:54PM
எழுத்தின் அளவு: அ + அ -

நியூசிலாந்து நாட்டில், துப்பாக்கி பயன்பாடு சட்டத்தை கடுமையாக்கும் விதமாக, அந்நாட்டு பிரதமர் ஜெசிந்தா ஆர்டன், நாடாளுமன்றத்தில் புதிய மசோதா ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

நியூசிலாந்து நாட்டில், ஆறு மாதங்களுக்கு முன், கிறைஸ்ட்சர்ச் மசூதியில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், 51 பேர் பலியாகினர். உலகையே உலுக்கிய இந்த சம்பவத்தை தொடர்ந்து, கிறைஸ்ட் சர்ச்சில், ராணுவத்தினர் பயன்படுத்தும் செமி ஆட்டோமேட்டிக் துப்பாக்கிகளுக்கு தடை விதிக்கப்பட்டது.

இந்நிலையில், துப்பாக்கி பயன்பாடு தொடர்பாக, அந்நாட்டு பிரதமர் ஜெசிந்தா ஆர்டன், அண்மையில், நாடாளுமன்றத்தில் புதிய மசோதா ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

அதில், உரிமம் பெற்று தனிநபர்கள் வைத்திருக்கும் துப்பாக்கிகளை முறையாக கண்காணிக்க பதிவேட்டை உருவாக்குவது என்றும், தனிநபர்கள் வைத்திருக்கும் துப்பாக்கிகளுக்கான உரிம காலத்தை, 10 ஆண்டுகளிலிருந்து 5 ஆண்டுகளாக குறைக்கப்படுகிறது என்றும் கூறப்பட்டிருந்தது.

மேலும், துப்பாக்கி வைத்திருக்கும் உரிமையாளரின் மனநிலை சரியில்லை எனில், அதை மருத்துவர்கள் கண்டறிந்து காவல் துறைக்கு தெரியப்படுத்த வேண்டும் எனவும், மசோதாவில் கூறப்பட்டுள்ளது. இந்த மசோதா இந்தாண்டு இறுதிக்குள் ஒப்புதல் பெற்று நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00