இன்று உலக முதலுதவி தினம் : முதலுதவி குறித்தான ஒரு விழிப்புணர்வு செய்தித் தொகுப்பை இப்போது பார்க்கலாம்...

Sep 14 2019 12:15PM
எழுத்தின் அளவு: அ + அ -

உலக முதலுதவி தினத்தை, செஞ்சிலுவை சங்கம், கடந்த 2000ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தியது. ஓர் உயிரைக் காப்பாற்ற, விழிப்புணர்வு ஏற்படுத்தும் வாய்ப்பாக இந்த தினத்தை கடைபிடிக்க வேண்டும் என்பதான், முதலுதவி தினத்தின் நோக்கம். உலக அளவில், மனித உயிர்களை பலி வாங்கும் முக்கிய காரணியாக இருப்பது, விபத்துகள்தான். இந்தியாவில் விபத்துகளால் இறப்பவர்களில் பெரும்பாலானோர், மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட முதல் ஒரு மணி நேரத்தில் பலியாவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இது, விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு முறையான முதலுதவி கிடைக்கவில்லை என்பதைத்தான் வெளிப்படுத்துகிறது.

விபத்துக்குள்ளானவரை பார்க்கும்போது, பக்கத்தில் நிற்பவரிடம் 'எப்படி நடந்தது'? என்பதை ஆர்வமாகக் கேட்டு தெரிந்து கொண்டு, அங்கிருந்து நகர்ந்து விடுகிறோம். அல்லது நம்மிடம் இருக்கும் செல்போனால் அதை படம்பிடித்து சமூகவலைதளத்தில் பதிவிட்டு சென்று விடுகிறோம். ஆண்டாண்டு காலமாக நம்மில் பலர், இதைத்தான் செய்து கொண்டிருக்கிறோம். வேடிக்கை பார்க்கவும், விபத்து நடந்த கதையைக் கேட்கவும் கூடிய மனிதர்கள் நினைத்திருந்தால், ஏராளமான உயிர்கள் காப்பாற்றப்பட்டிருக்கும். வேடிக்கை பார்ப்பவர்கள் காப்பாற்ற முன்வராததை அலட்சியம் என்று மட்டுமே சொல்ல முடியாது. முதலுதவி எப்படி செய்வது? உதவி செய்தால் சட்டப் பிரச்னைகளை எதிர்கொள்ள வேண்டுமோ? உள்ளிட்ட பல்வேறு காரணங்களும் இருக்கத்தான் செய்கிறது. என்றாலும், அதுகுறித்து பயம் தேவையில்லை என்பதை, நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

ஒரு உயிரைக் காக்க, மேலும் ஆபத்து ஏற்படாமல் இருக்க என்று, பலவற்றிற்கும் முதலுதவி பயன்படுகிறது. விபத்து நிகழ்ந்த ஒரு மணி நேரத்திற்குள் முதலுதவி அளிக்கும்போது 75 சதவீத உயிரிழப்பை தடுக்க முடியும். எனவே, ஒருவர் பாதிப்பிற்குள்ளானால் தயங்காமல் முதலுதவி செய்ய முன்வர வேண்டும். இதற்கு, மருத்துவராகவோ, செவிலியராகவோ இருக்க வேண்டிய அவசியமில்லை. ஆபத்தை விளைவிக்கும் காரணியைக் கண்டறிந்து பாதிக்கப்பட்டவரை அதிலிருந்து காப்பாற்றினாலே போதும். ஒருவருக்கு ஆபத்து ஏற்பட்டால், உடனடியாக 108 ஆம்புலன்சிற்கு தகவல் தெரிவிப்பதுகூட ஒருவகையில் முதலுதவி சிகிச்சைதான். பல மருத்துவமனைகளிலும், செஞ்சிலுவைச் சங்கங்களிலும் முதலுதவி செய்வதற்கான பயிற்சிகள் கற்றுத் தரப்படுகின்றன. முதலுதவி சிகிச்சை, எங்கேயும், எப்போதும் ஒரு உயிரைக் காக்கும் என்பதால், அதைக் கற்றுக் கொள்வது ஒவ்வொருவரின் சமூகக் கடமை.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00