பாகிஸ்தானின் கர்தார்பூர் குருநானக் தேவ் சமாதியை காண வரும் சீக்கியர்களுக்கு கட்டணம் - 20 அமெரிக்‍க டாலரை நுழைவு கட்டணமாக வசூலிக்‍க பாகிஸ்தான் முடிவு

Oct 16 2019 1:09PM
எழுத்தின் அளவு: அ + அ -

பாகிஸ்தானின் கர்தார்பூர் நகரில் உள்ள சீக்கிய மத ஸ்தாபகர் குருநானக் தேவின் சமாதிக்‍கு இந்தியாவில் இருந்து வருகை தரும் சீக்‍கியர்களிடம் 20 அமெரிக்‍க டாலர் நுழைவு கட்டணம் வசூலிக்‍க பாகிஸ்தான் முடிவு செய்துள்ளது.

சீக்கிய மத ஸ்தாபகர் குருநானக் தேவின் சமாதியான கர்தார்பூர் சாஹிப், பாகிஸ்தானில் சர்வதேச எல்லையை ஒட்டி ராவி நதிக்கரையில் அமைந்துள்ளது. இந்த சமாதிக்கு செல்வதை சீக்கியர்கள் மிகவும் புனிதமாக கருதுகின்றனர். தற்போது குருநானக்கின் 550-வது பிறந்த நாள் கொண்டாடப்படவுள்ள நிலையில், புனித இடத்திற்கு, இந்தியாவில் இருந்து சீக்கியர்கள் எளிதாக செல்லும் வகையில் பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூர் மாவட்டம் தேரா பாபா நானக் நகரிலிருந்து, சர்வதேச எல்லை வரை சிறப்பு பாதை அமைக்க மத்திய அரசு முடிவு செய்தது. பாகிஸ்தான் எல்லையிலிருந்து கர்தார்பூர் வரை சாலை அமைக்க பாகிஸ்தானும் ஒப்புக்‍ கொண்டுள்ளது. இதையடுத்து அடுத்த மாதம் 9-ம் தேதி இந்திய சீக்கியர்களுக்காக கர்தார்பூர் பாதை திறக்கப்பட உள்ளது.

இந்தியாவிலிருந்து வரும் சீக்கியர்களிடம் தலா 20 அமெரிக்‍க டாலர் நுழைவு கட்டணமாக வசூலிக்க பாகிஸ்தான் அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். அதற்கான வரைவு அறிக்கையையும் உயர்மட்டக்‍ குழு வாயிலாக இந்தியாவிடம் வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள இந்தியா, பாகிஸ்தான் அனுப்பிய வரைவு திட்ட அறிக்கைக்கு பதில் அளிக்காமல் உள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00