அடுத்த ஆண்டு ஃபிப்ரவரி மாதத்திற்குள் பயங்கரவாத அமைப்புகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் : பாகிஸ்தானுக்கு பயங்கரவாத நிதி கண்காணிப்பு குழு இறுதி கெடு

Oct 18 2019 7:11PM
எழுத்தின் அளவு: அ + அ -

அடுத்த ஆண்டு ஃபிப்ரவரி மாதத்திற்குள் பயங்கரவாத அமைப்புகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டுமென, பாகிஸ்தானுக்கு பயங்கரவாத நிதி கண்காணிப்பு குழு இறுதி கெடு விதித்துள்ளது. இது பற்றிய ஒரு தொகுப்பை ‌தற்போது பார்ப்போம்...

அண்டை நாடான பாகிஸ்தான், பயங்கரவாதிகளுக்கு ஆதரவளித்து வருவதாக, இந்தியா உள்ளிட்ட நாடுகள் குற்றஞ்சாட்டி வருகின்றன. பயங்கரவாதத்திற்கு ஆதரவு தெரிவித்து வரும் பாகிஸ்தானை தனிமைப்படுத்த வேண்டும் என்ற கருத்தும் தற்போது தலைதூக்கி உள்ளது.

இந்நிலையில், பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் நிதி வழங்கியதாகக் கூறி, கடந்த 2018-ம் ஆண்டு ஜூன் மாதத்தில், அந்நாட்டை எப்.ஏ.டி.எப்., எனப்படும், பய‍ங்கரவாத நிதி கண்காணிப்பு குழு கிரே பட்டியலில் சேர்த்தது. ‍மேலும், பயங்கரவாத அமைப்புகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கும்படி, அந்நாட்டிற்கு பல முறை இக்‍குழு எச்சரிக்கை விடுத்துள்ளது.

அண்மையில், ஃபிரான்ஸ் தலைநகர் பாரீசில், பயங்கரவாத நிதி கண்காணிப்பு குழு கூட்டம் நடைபெற்றது. இதில், பாகிஸ்தானுக்கு இறுதி கெடு விடுக்கப்பட்டுள்ளது. வரும் 2020-ம் ஆண்டு ஃபிப்ரவரி மாதத்திற்குள், பயங்கரவாத அமைப்புகளுக்கு எதிராக பாகிஸ்தான் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பயங்கரவாத நிதி கண்காணிப்பு குழு விடுத்த கெடுவிற்குள், பாகிஸ்தான் நடவடிக்கை எடுக்காவிட்டால், அந்நாடு கருப்புப் பட்டியலில் கண்டிப்பாக சேர்க்கப்படும் என்று கண்காணிப்பு குழுவின் தலைவர் சியாங்மின் லியு திட்டவட்டமாக​தெரிவித்துள்ளார். கருப்பு பட்டியலில் பாகிஸ்தான் சேரும் பட்சத்தில், அந்நாட்டுடனான வணிகத் தொ‌டர்புகள் உட்பட அனைத்தும் தடைபடும் என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00