பாகிஸ்தானில் தங்க நகைகளுக்‍கு பதில் தக்‍காளியை அணிந்த மணப்பெண் : தங்கத்துடன் தக்‍காளியை ஒப்பிட்ட புகைப்படம் வைரல்

Nov 20 2019 5:02PM
எழுத்தின் அளவு: அ + அ -

பாகிஸ்தானில் மணப்பெண் ஒருவர் தங்க நகைகளுக்‍கு பதிலாக தக்‍காளிகளால் செய்யப்பட்ட நகைகளை அணிந்திருக்‍கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

பாகிஸ்தானில் தக்காளி விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ளது. இந்தியா, ஆப்கானிஸ்தான் மற்றும் ஈரானில் இருந்து தக்காளி இறக்குமதி தடை செய்யப்பட்டதைத் தொடர்ந்து இந்த விலை உயர்வு ஏற்பட்டுள்ளது. ஒரு கிலோ தக்காளி 300 ரூபாயை தாண்டியதால், சாமானிய மக்கள் தக்காளியை வாங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே தக்காளி விலையைக் கட்டுப்படுத்த அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் அந்த நாட்டைச் சேர்ந்த மணப்பெண் ஒருவர், தங்க நகைகள் அணிவதற்கு பதிலாக தக்காளியை நகைகளாக அணிந்துள்ளார். கழுத்து, காது மற்றும் கைகளில் தங்க நகை போன்று தக்காளியை கோர்த்து செய்யப்பட்ட நகையை அவர் அணிந்திருந்தார். இவ்வாறு தங்கத்திற்கு நிகராக தக்காளியை ஒப்பிட்டிருந்த அவரது புகைப்படங்கள், சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00