இந்துக்கள் பாதிக்கப்படுவதாக அமித்ஷா கூறிய குற்றச்சாட்டுக்கு பங்களாதேஷ் அரசு திட்டவட்டமாக மறுப்பு - இந்திய பயணத்தை ரத்து செய்த பங்களாதேஷ் வெளியுறவுத்துறை அமைச்சர்

Dec 12 2019 4:35PM
எழுத்தின் அளவு: அ + அ -

பங்களாதேஷில் இந்துக்களுக்கு பாதுகாப்பில்லை என உள்துறை அமைச்சர் அமித்ஷா, நாடாளுமன்றத்தில் தெரிவித்த கருத்துகளின் எதிரொலியாக, அரசு முறை பயணமாக, இந்தியா வரவிருந்த பங்களாதேஷ் வெளியுறவுத்துறை அமைச்சர் பயணத்தை திடீரென ரத்து செய்துள்ளார்.

மாநிலங்களவையில் குடியுரிமை சட்டத்திருத்த மசோதா மீதான விவாதத்தின்போது பேசிய உள்துறை அமைச்சர் திரு.அமித்ஷா, பங்களாதேஷில் சிறுபான்மையினராக உள்ள இந்துக்கள், தங்களது மத நடவடிக்கைகளில் சுதந்திரமாக ஈடுபட முடியாமல் பாதிக்கப்படுவதாக தெரிவித்தார். அவரது இந்த குற்றச்சாட்டை, பங்களாதேஷ் முற்றிலும் மறுத்துள்ளது. அந்நாட்டில் வெளியாகும் "Dhaka Tribune" என்ற பத்திரிகைக்கு பேட்டியளித்துள்ள வெளியுறவுத்துறை அமைச்சர் திரு.அப்துல் மொமென், பங்களாதேஷ் இந்துக்கள் குறித்த அமித்ஷாவின் கருத்து முற்றிலும் பொய்யானது என தெரிவித்துள்ளார். உலகில் மத நல்லிணக்கத்தை பேணும் நாடுகளில் பங்களாதேஷும் ஒன்று எனத் தெரிவித்த அவர், தங்கள் நாட்டில் சிறுபான்மையினர் என யாரும் கிடையாது எனவும் குறிப்பிட்டுள்ளார். ஒருவேளை அமித்ஷா பங்களாதேஷில் சில காலம் தங்கியிருந்தால், இங்குள்ள மத நல்லிணக்கத்தை அவரால் தெரிந்துகொள்ள முடியும் எனவும் அப்துல் மொமென் தெரிவித்துள்ளார். அமித்ஷாவின் கருத்துகளை ஆய்வு செய்த பின், இந்திய அரசின் கவனத்திற்கு இவ்விவகாரத்தை எடுத்துச் செல்வோம் எனத் தெரிவித்த அவர், இரு நாடுகளுக்கு இடையேயான உறவை பாதிக்கும் வகையில், இந்தியா நடந்துகொள்ளாது எனத் தான் நம்புவதாகவும், அந்த பேட்டியில் தெரிவித்திருந்தார். இதனைத்தொடர்ந்து, 3 நாள் பயணமாக இன்று இந்தியாவிற்கு வருகை தரவிருந்த அப்துல் மொமென் தனது பயணத்தை திடீரென ரத்து செய்துள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00