தமிழகம் முழுவதும் புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆரின் 102-வது பிறந்தநாள் விழா : அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தினர் - பொதுமக்கள் உற்சாகக் கொண்டாட்டம் - மாலை அணிவித்து மரியாதை

Jan 18 2019 2:59PM
எழுத்தின் அளவு: அ + அ -

தமிழகம் முழுவதும் புரட்சித்தலைவர் டாக்‍டர் எம்.ஜி.ஆரின் 102-வது பிறந்தநாள் விழாவை, அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍ கழகத்தினர் மற்றும் பொதுமக்‍கள் உற்சாகமாகக்‍ கொண்டாடினர். திருவுருவச் சிலைக்‍கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

கடலூர் கிழக்கு மாவட்டம் நெல்லிக்குப்பம் நகர அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில், எம்ஜிஆரின் திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. பொதுமக்‍களுக்‍கு இனிப்புகள் வழங்கப்பட்டன. கடலூர் கிழக்கு மாவட்ட துணை செயலாளர் திரு. சுதாகர், உள்ளிட்ட கழக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

கடலூர் கிழக்கு மாவட்டம் விருத்தாச்சலம் நகர அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில், எம்ஜிஆர் பிறந்தநாளையொட்டி, பொதுமக்‍களுக்‍கு அன்னதானம் வழங்கப்பட்டது.

நகர கழக செயலாளர் மார்கெட் நடராஜன், மாநில எம்.ஜி.ஆர் மன்ற துணை செயலாளர் சோழன் சம்சுதீன் உள்ளிட்ட கழக நிர்வாகி கலந்து கொண்டனர்.

ஈரோடு மாநகர் மாவட்டம் 54-வது வார்டு பகுதி, மரப்பாலயத்தில் அமைக்‍கப்பட்டிருந்த எம்ஜிஆர் திருவுருவப் படத்திற்கு கழகத்தினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

புரட்சித் தலைவர் எம்ஜிஆர் பிறந்தநாளையொட்டி, திண்டுக்‍கல் மாவட்டம் வத்தலக்‍குண்டு பேரூராட்சி பகுதிகளில், கழகக்‍ கொடி ஏற்றி வைத்து, இனிப்புகள் வழங்கப்பட்டன. இதில் திரளான கட்சி நிர்வாகிகளும், பொதுமக்‍களும் கலந்துகொண்டனர்.

காஞ்சிபுரம் மத்திய மாவட்டம் திருப்போரூர் ஒன்றிய கழகம் சார்பில், அலங்கரிக்‍க வைக்‍கப்பட்டிருந்த எம்ஜிஆரின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் ஏழை எளியோருக்‍கு அன்னதானம் மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில், திருப்போரூர் நகர கழக செயலாளர் அருள்தாஸ், திருப்போரூர் ஒன்றிய கழக செயலாளர் முட்டுக்காடு முனுசாமி உள்ளிட்ட கழக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00