ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்‍க உச்சநீதிமன்றம் தடை விதித்திருப்பது மக்‍கள் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி - டிடிவி தினகரன் கருத்து

Feb 19 2019 5:51PM
எழுத்தின் அளவு: அ + அ -

ஸ்டெர்லைட் ஆலையை திறப்பதற்கு தடை விதித்ததன் மூலம் மக்‍கள் விரோத ஆட்சியாளர்களுக்‍கு உச்சநீதிமன்றம் சம்மட்டி அடி கொடுத்திருப்பதாக கழக துணைப் பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

கழக துணைப் பொதுச் செயலாளர் திரு.​டிடிவி தினகரன் இன்று வெளியிட்டுள்ள அறிக்‍கையில், ஸ்டெர்லைட் ஆலையைத் திறப்பதற்குத் தடை விதித்ததன் மூலம் மக்கள் விரோத ஆட்சியாளர்களுக்கு உச்சநீதிமன்றம் சம்மட்டி அடி கொடுத்திருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

தூத்துக்குடியில் சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்திய ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டம் நடத்திய அப்பாவிகள் 13 பேரை காக்கை, குருவிகளைப் போல சுட்டுக்கொன்றதை அவர் சுட்டிக்‍காட்டியுள்ளார்.

மத்திய அரசின் கைப்பாவையாக மாறி, ஈவு இரக்கமற்ற இந்த கொலை பாதகத்தைச் செய்த பழனிச்சாமி அரசு அதனை மறைக்க, ஆலையை மூடுவதாக நாடகமாடியதாகவும், 'நான் அடிப்பது போல அடிக்கிறேன்; நீ அழுவதைப் போல அழு' என்று ஸ்டெர்லைட் நிர்வாகத்துடன் மறைமுக கூட்டணி அமைத்துக் கொண்டு ஆட்சியாளர்கள் செயல்பட்டனர் எனவும், திரு.டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

ஆனால், உச்சநீதிமன்றம் வழங்கியிருக்கும் தீர்ப்பு, தூத்துக்குடியில் போராடிய மக்களின் உண்மையான உணர்வுகளுக்கு கிடைத்த வெற்றியாக அமைந்திருப்பதாக தெரிவித்துள்ள அவர், 'ஆலையைத் திறக்கலாம் என்று உத்தரவிட தேசிய பசுமை தீர்ப்பாயத்திற்கு அதிகாரம் இல்லை' எனவும் நீதிபதிகள் தீர்ப்பளித்து இருப்பது வரவேற்கத்தக்கது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

அதே நேரத்தில் ஆலையை மீண்டும் திறப்பதற்காக சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகப் போவதாக அதனை நடத்தும் வேதாந்தா நிறுவனம் அறிவித்திருக்கிறது- அதற்கு முன்பாகவே தமிழக அமைச்சரவையில் சிறப்புத் தீர்மானம் நிறைவேற்றி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கான நடவடிக்கையைப் பழனிச்சாமி அரசு மேற்கொள்ள வேண்டும் திரு.டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

அரசின் கொள்கை முடிவாக எடுத்து அதனை நீதிமன்றத்தில் தெரிவித்துவிட்டால் இந்தப் பிரச்சினைக்கு நிரந்தத் தீர்வு ஏற்படும்- மக்களின் மீது உண்மையான அக்கறை இருக்குமானால் ஆட்சியாளர்கள் இதைத்தான் செய்ய வேண்டும்- அப்படி செய்வதன் மூலம் எந்தத் தார்மீக நெறிகளும் இல்லாமல் 13 பேரை தலையிலும், நெஞ்சிலும் குறி வைத்துச் சுடுவதற்கு உத்தரவிட்ட பாவத்திற்குக் கொஞ்சமாவது பிராயச்சித்தம் தேடிக்கொள்ளலாம் எனவும் திரு.டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

ஸ்டெர்லைட் போராட்டத்தின் போது அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் நேரடியாக களத்திற்குச் சென்று அவர்களோடு கரம் கோர்த்து நின்றதைப் போல, அந்த ஆலையை நிரந்தரமாக மூடும் வரை தூத்துக்குடி மக்களோடு நின்று, அவர்களின் உணர்வுகளுக்காக எப்போதும் குரல் கொடுக்கும் என்றும் கழக துணைப் பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரன் உறுதிபட தெரிவித்துள்ளார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00