அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் பல்வேறு பகுதிகளில் கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் : ஏராளமான நிர்வாகிகள் கழகப் பணிகள் குறித்து ஆலோசனை

Feb 21 2019 3:24PM
எழுத்தின் அளவு: அ + அ -

அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில், பல்வேறு பகுதிகளில், கழக நிர்வாகிகளின் ஆலோசனைக்‍ கூட்டங்கள் நடைபெற்றன. இதில் ஏராளமான நிர்வாகிகள் கலந்துகொண்டு, கழகப் பணிகள் குறித்து ஆலோசனை நடத்தினர்.

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் ராமநாதபுரம் நகர் கழகம் சார்பில், நாடாளுமன்ற தேர்தலுக்கான பூத் கமிட்டி உறுப்பினர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. ராமநாதபுரம் நகராட்சி வார்டுகள், ஏழு மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு மண்டல குழு தலைவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அந்தந்த வார்டுகளுக்குரிய வாக்காளர் பட்டியல், சம்பந்தப்பட்ட பூத் கமிட்டி உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டது. இந்தக்‍ கூட்டத்தில் நகரக் கழகச் செயலாளர் ரஞ்சித் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

மாண்புமிகு அம்மாவின் 71-வது பிறந்தநாள் விழாவினை சிறப்பாக கொண்டாடுவது குறித்தும், மதுரை நாடாளுமன்ற தொகுதிக்கான கழக தேர்தல் பணிகள் குறித்தும், கழக உறுப்பினர்கள் மற்றும் வாக்காளர் சேர்ப்பு முகாம் குறித்தும் கழக நிர்வாகிகளின் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. இதில் ஒன்றிய செயலாளர் திரு. ராஜன், பேரூர் செயலாளர் திரு. சத்யபிரகாஷ் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

திருச்சி வடக்கு மாவட்ட கழகம் சார்பில், ஸ்ரீரங்கம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட அந்தநல்லூர் ஒன்றிய நிர்வாகிகளுடனான ஆலோசனை கூட்டம், வடக்கு மாவட்ட கழக செயலாளர் திரு. ஆர்.மனோகரன் தலைமையில் நடைபெற்றது. இதில் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற, ஒன்றிய, வட்ட அளவிலான பூத் கமிட்டி நிர்வாகிகளுக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டன. மற்றும் 2 - ஆம் கட்ட உறுப்பினர் சேர்க்கையிணை தீவிரப்படுத்தி தேர்தல் பணிகளை மேற்கொள்வது எனவும் ஆலோசிக்‍கப்பட்டது. கழக நிர்வாகிகள் ஏராளமானோர் இந்தக்‍ கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார், திற்பரப்பு, பேச்சிபாறை உள்ளிட்ட 3 ஊராட்சி பகுதிகளில், நாடாளுமன்ற தேர்தலுக்காக அமைக்கபட்ட கழக பூத் கமிட்டி ஆய்வு கூட்டம் நடைபெற்றது. கழக வேட்பாளரை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற செய்ய ஆற்றவேண்டிய களப்பணிகள் குறித்து இந்தக்‍ கூட்டத்தில் ஆலோசிக்‍கப்பட்டன. இதில் மாநில அம்மா பேரவை துணை செயலாளர் திரு. லட்சுமணன், மேற்கு மாவட்ட செயலாளர் திரு. ஜெங்கின்ஸ், திருவட்டார் ஒன்றிய செயலாளர் நிமால்உட்பட கழக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00