அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் பல்வேறு பகுதிகளில் கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் : ஏராளமான நிர்வாகிகள் கழகப் பணிகள் குறித்து ஆலோசனை

Feb 22 2019 12:55PM
எழுத்தின் அளவு: அ + அ -

அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில், பல்வேறு பகுதிகளில், கழக நிர்வாகிகளின் ஆலோசனைக்‍ கூட்டங்கள் நடைபெற்றன. இதில் ஏராளமான நிர்வாகிகள் கலந்துகொண்டு, கழகப் பணிகள் குறித்து ஆலோசனை நடத்தினர்.

கடலூர் கிழக்கு மாவட்டக்‍ கடலூர் நகர கழகம் சார்பில், கழக செயலாளர் திரு. வி.டி. கலைச்செல்வன் தலைமையில் ஆலோசனைக்‍கூட்டம் நடைபெற்றது. இதில், வரும் 25-ம் தேதி முதல் 28-ம் தேதி வரை கடலூர் கிழக்கு மாவட்டத்தில் மக்கள் சந்திப்பு புரட்சிப்பயணம் மேற்கொள்ள உள்ள திரு. டிடிவி தினகரனுக்கு, எழுச்சிமிகு வரவேற்பு அளிப்பது உள்ளிட்டவை குறித்து ஆலோசனை வழங்கப்பட்டது. கடலூர் நகர செயலாளர் திரு. தங்க. வினோத்ராஜ், மாநில மருத்துவர் அணி துணை செயலாளர் ராஜா பழனிவேல் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் தொண்டர்கள் பலர் கலந்துகொண்டனர்.

ராமநாதபுரம் நகரக் கழகம் சார்பில், சின்னக்கடை பகுதியில் பூத் கமிட்டி உறுப்பினர்கள் ஆலோசனைக்‍ கூட்டம், நகர கழகச் செயலாளர் திரு. ரஞ்சித் தலைமையில் நடைபெற்றது. வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் வாக்கு சேகரிக்கும் பணியில் எவ்வாறு செயல்படுவது குறித்து உறுப்பினர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது.

நெல்லை மாநகர் மாவட்ட பாளையங்கோட்டை ஒன்றிய கழகம் சார்பில், கழக நிர்வாகிகள் ஆலோசனைக்‍ கூட்டம் மாநகர் மாவட்ட கழக செயலாளர் கல்லூர் இ.வேலாயுதம் தலைமையில் நடைபெற்றது. மாண்புமிகு அம்மா பிறந்தநாளையொட்டி ஏழை-எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கவேண்டும் - வரும் நாடாளுமன்றத் தேர்தலில் கழக வேட்பாளர் அதிகமான ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற பாடுபட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கழக மாநில அம்மா பேரவை இணை செயலாளர் பரமசிவ ஐயப்பன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

கன்னியாகுமரி மேற்கு மாவட்டம் தக்கலை ஒன்றியத்திற்கு உட்பட்ட குமாரபுரத்தில், நாடாளுமன்றத் தேர்தலுக்காக அமைக்கப்பட்ட பூத் கமிட்டி ஆய்வுக்‍ கூட்டம் நடைபெற்றது. இதனையடுத்து, திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளில் இருந்து பிரிந்து ஏராளமானோர் கழகத்தில் இனைந்தனர். மாநில அம்மா பேரவை துணைச் செயலாளர் லட்சுமணன், மேற்கு மாவட்ட செயலாளர் ஜெங்கின்ஸ் உட்பட கழக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

நாகை வடக்கு மாவட்ட கழகம் சார்பில், கழக நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் மயிலாடுதுறையில் நடைபெற்றது. கூட்டத்தில் கழக பொருளாளர் திரு. எம். ரெங்கசாமி பங்கேற்று, நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்வது குறித்தும், பூத் கமிட்டி அமைப்பது பற்றியும் ஆலோசிக்கப்பட்டது. மாவட்ட கழகச் செயலாளர் திரு. எஸ். செந்தமிழன், மாவட்ட அவைத் தலைவர் திரு. என். சந்திரமோகன் பங்கேற்றனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00