தேர்தலையொட்டி கூட்டணி என்ற பெயரில் தமிழகத்தில் மிகப்பெரிய கேலிக்கூத்து நடைபெறுகிறது : கழக துணைப்பொதுச்செயலாளர் டிடிவி. தினகரன் கடும் விமர்சனம்

Feb 25 2019 5:06PM
எழுத்தின் அளவு: அ + அ -

சேலம் மாவட்டத்தில் மக்‍கள் சந்திப்பு புரட்சிப் பயணம் மேற்கொண்டுவரும் கழக துணைப் பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரனுக்கு, கழக நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் எழுச்சிமிகு வரவேற்பு அளித்து வருகின்றனர்.

கழகத் தொண்டர்களின் பேரெழுச்சியோடு, தமிழகத்தில் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் நடைபெற்று வரும் மக்‍கள் சந்திப்பு புரட்சிப் பயணத்தின் தொடர்ச்சியாக, சேலம் மாவட்டத்தில் கழக துணைப் பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரன், பல்வேறு தொகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு எழுச்சி உரை ஆற்றிவருகிறார். இதன் தொடர்ச்சியாக இன்று சேலம் புறநகர் கிழக்‍கு மாவட்டத்திற்குட்பட்ட வீரபாண்டி, சங்ககிரி ஆகிய சட்டமன்றத் தொகுதிகளிலும், சேலம் புறநகர் மேற்கு மாவட்டத்திற்குட்பட்ட ஓமலூர், மேட்டூர், எடப்பாடி ஆகிய சட்டமன்றத் தொகுதிகளிலும் திரு. டிடிவி தினகரன் எழுச்சி உரை ஆற்றுகிறார்.

இன்று மாலை சேலம் புறநகர் மேற்கு மாவட்டத்திற்குட்பட்ட ஓமலூர் செல்லும் வழியில் ஓமலூர் டோல்கேட் அருகே, கழக துணைப் பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரனுக்கு, ஏராளமான பெண்கள், பொதுமக்கள் கூடி, மலர்தூவி, பட்டாசு வெடித்து எழுச்சிமிகு வரவேற்பு அளித்தனர்.

அப்போது, அங்கு கூடியிருந்த மக்களிடையே பேசிய திரு. டிடிவி தினகரன், தமிழக மக்கள் என்றைக்கும் துரோகத்திற்கு துணை போக மாட்டார்கள் என்றும், எப்போதும் நியாயத்தின் பக்கமே நிற்பார்கள் என்றும் உறுதிபடத் தெரிவித்தார்.

இதனையடுத்து, நாரணம்பாளையம் பகுதி மக்கள் மற்றும் தொண்டர்கள் சார்பில், கழக துணைப் பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரனுக்கு, ஆளுயர மாலை அணிவிக்கப்பட்டு, மேளதாளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00