மெகா கூட்டணி மாய பிம்பம் தவிடுபொடி - வேட்பாளர் பட்டியலால் கோஷ்டி பூசல் - தகராறு நிர்வாகிகள் எங்கே? என இ.பி.எஸ்., ஓ.பி.எஸ். காத்திருப்பு

Mar 19 2019 4:18PM
எழுத்தின் அளவு: அ + அ -

நாடாளுமன்றத் தேர்தலில் இ.பி.எஸ். தரப்பினர் அமைத்த கூட்டணி தொடங்கி, தொகுதி ஒதுக்கீடு முதல், வேட்பாளர் பட்டியல் தயாரிப்பு வரை கோஷ்டி பூசல் நாள்தோறும் வெவ்வேறு வடிவங்கள் எடுத்து அலங்கோலங்களாகி வருகின்றன. உச்சகட்டமாக, ராயபேட்டை அலுவலகத்தில் இன்றைய ஆலோசனைக் கூட்டத்தை மாவட்டச் செயலாளர்கள் புறக்கணித்துள்ளதால், கூட்டத்தைத் தொடங்காமல் இ.பி.எஸ். - ஓ.பி.எஸ். காத்திருந்தனர்.

மெகா கூட்டணி என்ற மாய வார்த்தை ஜாலத்தைப் பயன்படுத்தி தொலைக்காட்சிகளில் மெகா சீரியல் காண்பித்து வந்த எடப்பாடி தரப்பினர், கூட்டணிக்காக அரசியல் கட்சித் தலைவர்கள் வீடு வீடாக ஏறி இறங்கி ஒருவழியாக கூட்டணி என்று அறிவித்தாலும், இணைப்பு நடந்துவிட்டது - மனங்கள் இணையவில்லை என்ற முந்தைய சோகக் கீதம்தான் ஒலித்துக் கொண்டிருக்கிறது.

ஓ.பி.எஸ். தரப்பு தொகுதி அறிவிப்பு வெளியிடும் போதுகூட, பா.ஜ.க.வைத் தவிர, மற்ற கூட்டணிக் கட்சிகள் புறக்கணித்தன. இதனைத்தொடர்ந்து, நேற்று இரவு வேட்பாளர் பட்டியலை வெளியிடப்போவதாகக் கூறி, சென்னை ராயப்பேட்டை அ.தி.மு.க. அலுவலகத்திற்கு வந்த இ.பி.எஸ்., ஓ.பி.எஸ். முன்னிலையிலேயே எம்.பி., எம்.எல்.ஏ. சீட்டுக்காக கைகலப்பு தகராறு ஏற்பட்டது. ராஜன் செல்லப்பா மகன் ராஜ் சத்யனுக்கு சீட் வழங்கக் கூடாது என அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் போர்க்கொடி தூக்கியதும் - அக்ரி கிருஷ்ணமூர்த்திக்கு சீட் வழங்கக் கூடாது என கலசப்பாக்கம் எம்.எல்.ஏ. எதிர்ப்பு தெரிவித்ததும் - பெரம்பூர் சட்டமன்றத் தொகுதி ஓ.பி.எஸ். ஆதரவாளர் ராஜேசுக்கு வழங்கவே கூடாது என வெங்கடேஷ் பாபு மல்லுக்கட்டியதும், என நிர்வாகிகளிடையே கடும் போட்டியும், தகராறும் ஏற்பட்டது. 4 மணி நேரமாக அ.தி.மு.க. அலுவலகம் போர்க்களமாக உருமாறிய நிலையில், வேட்பாளர் பட்டியலை வெளியிட முடியாமல், பத்திரிகையாளர்களையும் சந்திக்காமல் ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். அவசர அவசரமாக வெளியேறினர்.

பின்னர் சிறிது நேரத்தில் வேட்பாளர் பட்டியல் ஓசையின்றி வாட்ஸ்-அப் மற்றும் மெயில் மூலமாக வெளியிடப்பட்டது. வேட்பாளர் பட்டியலில் வாரிசுகளுக்கும், கட்சியில் உயர்பதவி வகித்து வருபவர்களுக்குமே சீட் வழங்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ந்த மாவட்டச் செயலாளர்கள், அமைச்சர்கள் சிலர் கடும் அதிருப்தி அடைந்தனர்.

இந்தநிலையில், அ.தி.மு.க. அலுவலகத்தில் இன்று காலை 10 மணிக்கு தொடங்குவதாக இருந்த தேர்தல் ஆலோசனைக் கூட்டத்திற்கு அமைச்சர்கள் பலரும், மாவட்டச் செயலாளர்கள் பெரும்பாலானோரும் புறக்கணித்ததால், கூட்டம் தொடங்கமுடியாத நிலை உருவாகியுள்ளது. தகுதியான தலைமை இல்லாத காரணத்தால், இந்த அவல நிலை நீடிப்பதாக கட்சியினர் வேதனைத் தெரிவித்தனர். தேர்தலுக்கு முன்பாகவே தொடங்கிய இந்த முரண்பாட்டால், இந்தத் தேர்தலில் அ.தி.மு.க.வும், அதன் கூட்டணியும் தேறாது என்பதற்கு நடைபெற்று வரும் காட்சிகளே சாட்சி என்கின்றது அ.தி.மு.க. வட்டாரம்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00