அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் வெற்றி பெறுவது 100 சதவீதம் உறுதி : கழக வேட்பாளர் தகவல்

Mar 20 2019 3:39PM
எழுத்தின் அளவு: அ + அ -

மதுரையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் வெற்றி பெறுவது 100 சதவீதம் உறுதி எனவும், மக்கள் சத்தியத்திற்கு துணை நிற்பார்கள் எனவும் கழக வேட்பாளர் திரு.டேவிட் அண்ணாத்துரை தெரிவித்துள்ளார்.

மதுரை நாடாளுமன்ற தொகுதி கழக வேட்பாளர் திரு.டேவிட் அண்ணாத்துரை, கே.கே.நகர் பகுதியில் உள்ள புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் திருவுருவசிலைக்கும், அவுட்போஸ்ட் பகுதியில் உள்ள தந்தை பெரியாரின் திருவுருவசிலைக்கும், நெல்பேட்டை பகுதியில் உள்ள பேரறிஞர் அண்ணாவின் சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அங்கு அவருக்கு கழக தொண்டர்களும், பொதுமக்களும் உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது SDPI கட்சியினர் மற்றும் கழக எம்.ஜி.ஆர் மன்ற மாநிலச் செயலாளர் திரு.பரமநாதன், மதுரை மாநகர் வடக்கு மாவட்ட செயலாளர் திரு.ம.ஜெயபால், தெற்கு மாவட்ட செயலாளர் திரு.ஷ.ராஜலிங்கம், புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் திரு.செ.சரவணன், மகளிரணி செயலாளர் வளர்மதி செல்வராஜ் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த திரு.டேவிட் அண்ணாதுரை, அதிமுக கூட்டணி, தோல்வி கூட்டணி என்பதால் எந்த வேட்பாளரை நிறுத்தினாலும் அவர்களுக்கு தோல்வி உறுதி என தெரிவித்தார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00