தமிழகத்தில் ஹைட்ரோ கார்பனுக்‍கு மீண்டும் அனுமதி வழங்கும் மத்திய அரசின் செயலுக்‍கு டிடிவி தினகரன் கடும் கண்டனம் - உடனடியாக திரும்பப் பெறவேண்டும் என வலியுறுத்தல்

Apr 23 2019 5:49PM
எழுத்தின் அளவு: அ + அ -

தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு மீண்டும் அனுமதி வழங்கும் மத்திய அரசின் நடவடிக்‍கைக்‍கு கழக பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்‍கையில், தமிழகத்தில் காவிரி டெல்டா உள்ளிட்ட 41 இடங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு அனுமதி அளித்திருப்பது கண்டனத்திற்குரியது - இதனை உடனடியாகத் திரும்பப் பெறவேண்டும் என அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍ கழகம் வலியுறுத்துகிறது எனக்‍ குறிப்பிட்டுள்ளார்.

நாகப்பட்டினம், கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட பகுதிகளில் 67 இடங்களில் ஹைட்ரோ கார்பன் கிணறுகளை அமைக்‍க ஓ.என்.ஜி.சி. நிறுவனம் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் அனுமதி கேட்டிருந்தது. ஆனால், மக்‍கள் விரோத மத்திய அரசும், அதற்கு அடிமை சேவகம் செய்யும் பழனிசாமி அரசும் வாய்திறக்‍காமல் இருந்துவிட்டு, இப்போது தேர்தல் முடிந்ததும் 41 இடங்களில் ஓ.என்.ஜி.சி. நிறுவனம் ஹைட்ரோ கார்பன் கிணறுகளை அமைப்பது குறித்து ஆய்வு செய்ய அனுமதி அளிக்‍கப்பட்டிருப்பது வன்மையாகக்‍ கண்டிக்‍கத்தக்‍கது என்றும் திரு. டிடிவி தினகரன் குறிப்பிட்டுள்ளார்.

தமிழகத்தை பாலைவனமாக்‍கும் ஹைட்ரோ கார்பன் போன்ற திட்டங்களை செயல்படுத்துவதில் மத்திய அரசு விடாப்பிடியாக நிற்கிறது. சோமாலியா நாட்டைப் போல் தமிழகத்தை மாற்றுவதற்கு துடிக்‍கிற இவர்களின் திட்டங்களை ஒருபோதும் இந்த மண்ணில் அனுமதிக்‍க முடியாது - இதற்கான ஆய்வுகளை பழனிசாமி அரசு உறுதியாக தடுத்து நிறுத்தவேண்டும் - ஓ.என்.ஜி.சி. உட்பட எந்த நிறுவனத்திற்கும் மாநில அரசு சார்பில் அனுமதி அளிக்‍கக்‍கூடாது - அதையும் மீறி செயல்படுத்த துடித்தால் மக்‍கள் சக்‍தி வேடிக்‍கைப் பார்த்துக்‍ கொண்டிருக்‍காது எனத் தெரிவித்துள்ள திரு. டிடிவி தினகரன், நமது வாழ்க்‍கை முறையான விவசாயத்தை அழித்து, தமிழகத்தை பாலைவனமாக்‍கும் இதுபோன்ற திட்டங்களை செயல்படுத்துவதை அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍ கழகம் ஒருபோதும் ஏற்காது என்றும், பாதிக்‍கப்பட்ட மக்‍களோடு எப்போதும் துணை நிற்போம் என்றும் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00