ராமநாதபுரத்தில் இருந்து தூத்துக்குடிக்கு எரிவாயு கொண்டு செல்ல விவசாய நிலங்களை கையகப்படுத்துவது தொடர்பான விவகாரம் - மத்திய அரசின் அறிவிப்பாணைக்கு இடைக்கால தடை விதித்தது உயர்நீதிமன்ற மதுரைக்கிளை

May 15 2019 6:28PM
எழுத்தின் அளவு: அ + அ -
ராமநாதபுரத்தில் இருந்து தூத்துக்குடிக்கு எரிவாயு கொண்டு செல்வதற்கான குழாய் அமைக்க, விவசாய நிலங்களை கையகப்படுத்ததுவதற்கு மத்திய அரசு பிறப்பித்த அறிவிப்பாணைக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டது.

ராமநாதபுரத்தில் இருந்து தூத்துக்குடிக்கு குழாய் மூலம் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு விநியோகம் செய்ய, 700 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பூமிக்கடியில் குழாய் பதிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக, இந்தியன் ஆயில் கழக அதிகாரிகள், கடந்த ஆறாம் தேதி, தெற்கு வீரபாண்டியபுரம் கிராமத்தில் உள்ள விவசாயிகளிடம் ஆவணங்களில் கையெழுத்து பெற்றதோடு இழப்பீடு பெற்றுக் கொள்ளுமாறும் வலியுறுத்தினர். இதுகுறித்து விவசாயிகள் கேட்டபோது, தூத்துக்குடியில் உள்ள ஸ்பிக், ஸ்டெர்லைட், dcw உள்ளிட்ட வாடிக்கையாளர்களுக்கு எரிவாயு விநியோகம் செய்வதற்காக, பூமிக்கடியில் இயற்கை எரிவாயு குழாய்கள் பதிக்கவிருப்பதாகவும், அதற்காக நிலத்தை கையகப்படுத்த உள்ளதாகவும் தெரிவித்தனர்.

ஆனால் ராமநாதபுரம் - தூத்துக்குடி வரை எரிவாயு குழாய் அமைக்க பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு ஒழுங்கு முறை வாரியத்திடம் அனுமதி பெறவில்லை எனவும், எனவே இத்திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்துவது தொடர்பாக, கடந்த பிப்ரவரி மாதம் மத்திய அரசு பிறப்பித்த அறிவிப்பாணையை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் அமர்வு, மத்திய அரசின் அறிவிப்பாணைக்கு இடைக்கால தடை விதித்தும், பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத்துறை செயலர், சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை செயலர், பெட்ரோலியம் மற்றும் இயற்கை வாயு ஒழுங்கு முறை வாரிய செயலர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3030.00 Rs. 3180.00
மும்பை Rs. 3024.00 Rs. 3202.00
டெல்லி Rs. 3026.00 Rs. 3204.00
கொல்கத்தா Rs. 3027.00 Rs. 3205.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 39.40 Rs. 39400.00
மும்பை Rs. 39.40 Rs. 39400.00
டெல்லி Rs. 39.40 Rs. 39400.00
கொல்கத்தா Rs. 39.40 Rs. 39400.00