ஹைட்ரோ கார்பனுக்கு எதிராகப் போராடும் அனைத்துத் தரப்பினருக்கும் அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍கழகம் ஆதரவாக நிற்கும் - டிடிவி தினகரன் உறுதி

May 22 2019 5:50PM
எழுத்தின் அளவு: அ + அ -

தமிழகத்தைப் பாலைவனமாக்‍குவதற்காக ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த துடிக்‍கும் மத்திய-மாநில அரசுகளுக்‍கு கழகப் பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

திரு.டிடிவி தினகரன் தனது டிவிட்டர் பக்‍கத்தில் இதுதொடர்பாக வெளியிட்டுள்ள பதிவில், தமிழகத்தைப் பாலைவனமாக்குவதற்காக நாகை, திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தைச் செயல்படுத்த துடிக்கும் மத்திய- மாநில ஆட்சியாளர்களைக் கண்டிப்பதாக தெரிவித்துள்ளார்.

விவசாயிகள், மீனவர்கள் என ஹைட்ரோ கார்பனுக்கு எதிராகப் போராடும் அனைத்துத் தரப்பினருக்கும் அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍கழகம் ஆதரவாக நிற்கும் - புதுச்சேரியைப் போல, தமிழகத்திலும் விவசாயிகள் மற்றும் மீனவர்களின் வாழ்வாதாரத்தை அழிக்கின்ற எந்த திட்டத்திற்கும் அனுமதி இல்லை என்று பழனிச்சாமி அரசு அறிவிக்க வேண்டும் என திரு.டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

மக்களைத் துச்சமாக நினைத்து ஆட்டம் போட்ட ஆட்சியாளர்களுக்கு சரித்திரத்தில் கிடைத்த தண்டனைகளை இந்த எதேச்சதிகாரிகள் மறந்துவிடக்கூடாது என்றும் திரு.டிடிவி தினகரன் தனது டிவிட்டர் பக்‍கத்தில் தெரிவித்துள்ளார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00