சென்னை உள்பட இந்தியாவின் 21 நகரங்களில் அடுத்த ஆண்டுக்குள் நிலத்தடி நீர் என்பதே இருக்காது : நிதி ஆயோக் அமைப்பு அறிக்கை வெளியீடு

Jun 21 2019 1:24PM
எழுத்தின் அளவு: அ + அ -

சென்னை உள்பட இந்தியாவின் 21 நகரங்களில் அடுத்த ஆண்டுக்குள் நிலத்தடி நீர் என்பதே இருக்காது என நிதி ஆயோக் அமைப்பு அறிக்‍கை வெளியிட்டுள்ளது.

நாடு முழுவதும் பரவலாக தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், நிலத்தடி நீர் குறித்து நிதி ஆயோக்‍ அமைப்பு அறிக்‍கை வெளியிட்டுள்ளது. அதில், டெல்லி, சென்னை, பெங்களூரு, ஹைதராபாத் உள்ளிட்ட இந்தியாவின் 21 நகரங்களில் அடுத்த ஆண்டுக்குள் நிலத்தடி நீர் என்பதே இருக்காது என்ற அதிர்ச்சி தகவல் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் 10 கோடி மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்‍கப்பட்டுள்ளது. மேலும், 2030ம் ஆண்டுக்குள் இந்தியாவின் மக்கள்தொகையில் 40 சதவீதம் பேருக்கு குடிநீர் வசதி இருக்காது எனவும் கூறப்பட்டுள்ளது.

சென்னை மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் உள்ள 3 ஆறுகள், 4 நீர் நிலைகள், 5 சதுப்பு நிலங்கள், 6 காடுகள் ஆகியவை முற்றிலும் வறண்டு விட்டதாகவும் நிதி ஆயோக் வெளியிட்டுள்ள அறிக்‍கை மூலம் தகவல் வெளியாகி உள்ளது. அதேபோல் சென்னையை விட மற்ற மெட்ரோ நகரங்களில், நீர் ஆதாரங்களும், மழைப்பொழிவும் அதிகமாக இருப்பதாகவும் அறிக்‍கையில் தெரிவிக்‍கப்பட்டுள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00