நாடு முழுவதும் கல்லூரி, பல்கலைக்கழகங்களில் இளநிலை பட்டப்படிப்புகளில் இந்திமொழி பாடத்தை கட்டாயமாக்க நடவடிக்கை : பல்கலைக்கழக மானியக்குழு சுற்றறிக்கைக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம்

Jun 26 2019 6:01PM
எழுத்தின் அளவு: அ + அ -

நாடு முழுவதும் கல்லூரி, பல்கலைக்கழகங்களில் இளநிலை பட்டப்படிப்புகளில் இந்திமொழி பாடத்தை கட்டாயமாக்க பல்கலைக்கழக மானியக்குழு வெளியிட்டுள்ள சுற்றறிக்கைக்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

மத்திய அரசு அன்மையில் வெளியிட்ட புதிய தேசிய கல்வி கொள்கை வரைவு அறிக்கையில், நாடு முழுவதும் மும்மொழி கொள்கையை அமல்படுத்த பரிந்துரை செய்யப்பட்டது. இந்தி மொழி திணிப்புக்கு தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா, மேற்குவங்கம் உள்ளிட்ட பல மாநிலங்களில் கடும் எதிர்ப்பு எழுந்தது.

இந்நிலையில், அனைத்து இளநிலை பட்டப்படிப்புகளிலும் இந்தி பாடத்தை கட்டாயமாக்க பல்கலைக்கழக மானியக்குழு அனைத்து பல்கலை கழகங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.

இது, இந்தியை திணிக்கும் மற்றொரு முயற்சி என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் அரசியல் தலைமைக்குழு அறிக்கை வெளியிட்டுள்ளது. பல்வேறு மொழிகளையும், கலாசாரங்களையும் கொண்ட இந்தியாவில் ஒரு குறிப்பிட்ட மொழியை திணிக்க முயற்சிப்பது, மற்ற மொழி பேசுபவர்கள் இடையே போராட்டத்தை தூண்டி விடும்- நாட்டின் ஒற்றுமையை சீர்குலைத்து விடும் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பலகலைக்கழக மான்யக்குழுவின் சுற்றறிக்கைக்கு டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் மாணவர்களும், பேராசிரியர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர்.

சுற்றறிக்கைக்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில், இந்தியை கட்டாய பாடம் ஆக்க முடியுமா என்று கருத்து கேட்பதற்காக சில பல்கலைக் கழகங்களுக்கு அந்த சுற்றறிக்கை அனுப்பி வைக்கப்பட்டதாக யு.ஜி.சி. செயலாளர் ரஜ்னிஷ் ஜெயின் விளக்கம் அளித்துள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00