பாலிவுட் நடிகர் நவாசுதீன் சித்திக்கின் மனைவி ஜைனப் மீது சித்திக்கின் தாயார் மும்பை போலீசில் புகார்
Jan 23 2023 4:36PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பாலிவுட் நடிகர் நவாசுதீன் சித்திக்கின் மனைவி ஜைனப் மீது சித்திக்கின் தாயார் மெஹ்ருன்னிசா மும்பை போலீசில் புகார் அளித்துள்ளார். மும்பை புறநகர் பகுதியில் உள்ள வெர்சோவா காவல்நிலையத்தில் தனது மருமகள் ஜைனப் மீது மெஹ்ருன்னிசா அளித்த புகாரில் சொத்து விவகாரம் தொடர்பாக தன்னிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறியுள்ளார். இதையடுத்து நவாசுதீன் சித்திக்கின் இரண்டாவது மனைவியான ஜைனப் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பி உள்ளனர்.