ரசிகருடன் செல்ஃபி எடுத்த போது திடீரென ஆத்திரமடைந்த பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர் : ரசிகரின் செல்போனை வாங்கி வீசி எறிந்ததால் பரபரப்பு

Jan 28 2023 11:06AM
எழுத்தின் அளவு: அ + அ -

பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர், ரசிகர் ஒருவரின் செல்போனை வாங்கி தூக்கி வீசும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிறது. இதற்கு நெட்டிசன்கள் பலரும் பல்வேறு கருத்துகளை தெரிவித்து வருகின்றர். அந்த வீடியோவில் ரசிகர் ஒருவர் ரன்பீர் கபூருடன் செல்பி எடுக்க முயற்சிக்கிறார். அதே சமயம் போட்டோகிராபர்கள் பலர் ரன்பீர் கபூரை அழைத்துக் கொண்டிருக்கின்றனர். இருப்பினும் ரன்பீர் கபூர் சிரித்துக் கொண்டே ரசிகரின் செல்பிக்கு போஸ் கொடுக்கிறார். ஆனால் அந்த ரசிகர் சரியாக செல்பி எடுக்க முடியாமல் தடுமாறுகிறார். இதனைப் பார்த்த ரன்பீர், அந்த ரசிகரின் செல்போனை வாங்கி அதை வீசி எறிகிறார். இந்த சம்பவம் மும்பையில் நடந்ததாக கூறப்படும் நிலையில், வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், ரன்பீர் கபூரை இணையவாசிகள் திட்டித் தீர்க்க தொடங்கியுள்ளனர். ஆனால், இந்த வீடியோ விளம்பரத்தின் ஒரு பகுதியாக எடுக்கப்பட்டது என்றும் கூறப்படுகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00