பல கோடி ரூபாய் மதிப்பிலான சிலைகள் மாயமானதற்கான முகாந்திரம் இருப்பதால் தஞ்சை பெரியகோவிலில் 3-வது கட்டமாக ஆய்வு : சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் தகவல்

Oct 12 2018 5:09PM
எழுத்தின் அளவு: அ + அ -

பல கோடி ரூபாய் மதிப்பிலான சிலைகள் மாயமானதற்கான முகாந்திரம் இருப்பதால் தஞ்சை பெரியகோவிலில் 3-வது கட்டமாக ஆய்வு நடைபெற்றதாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர்.

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, மாமன்னன் ராஐராஐ சோழன் கட்டிய தஞ்சாவூர் பெரியகோவிலில், பிற்காலசோழர் காலம் முதலான மிகவும் பழமையான சிலைகள் இருந்து வரும் நிலையில், பல கோடி ரூபாய் மதிப்பிலான சிலைகள் கடத்தப்பட்டுள்ளதாக புகார் எழுந்தது. இந்நிலையில், சென்னையில் ரன்வீர் ஷா வீட்டில் ஏராளமான சிலைகள் கண்டெடுக்கப்பட்டது.

இதைடுத்து தஞ்சாவூர் பெரியகோவிலில் 3-வது கட்டமாக சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு கூடுதல் டி.எஸ்.பி. ராஜாராமன், தொல்லியல் துறை தென்மண்டல இயக்குனர் நம்பிராஐன் உள்பட 20 பேர் கொண்ட குழுவினர் 4 மணி நேரமாக சோதனை நடத்தினர். அப்போது பெரியகோவிலின் அர்த்தமண்டபம், அம்மன் சன்னதியில் உள்ள நடராஜர் சிலை, தட்சிணாமூர்த்தி சிலை உள்ளிட்ட 44 சிலைகளின் உயரம், அகலம் உள்ளிட்டவைகளை அளவிட்டதோடு, சிலைகளின் தொன்மை குறித்து ஆய்வு செய்தனர். முழுமையான ஆய்வுக்‍குப் பிறகே உண்மை நிலை தெரியவரும் என திரு. ராஜாராமன் தெரிவித்தார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00